முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உதவிக்கரம்

ருப்பதற்குச் சொந்தமாக ஓர் இருப்பிடமோ உணவுக்கான வருமானத்துக்காகக்கூட சரியானதொரு தொழிலோ இல்லாமல் தவிக்கும் நிலையிலுள்ள ஒரு குடும்பத்தில் யாருக்காவது, எதிர்பாராத விதமாக சக்திக்கு மீறிய மிகப்பெரும் தொகை செலவு செய்யவேண்டிய அளவுக்குக் கடுமையான நோய் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அதுவும் மூன்று பேருக்கு ஏற்பட்டால்? அந்நோய், சிறுநீரக பாதிப்பாக இருந்தால்..? நினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சம் நடுங்கிறதல்லவா? அத்தகையதொரு நிலைமை நம் குடும்பத்துக்கோ அல்லது நம் நெருங்கிய உறவினர்களில் யாருடைய குடும்பத்துக்கோ ஏற்பட்டால் நாம் என்ன பாடுபடுவோம்?

சென்னையில் வசிக்கும் 11 வயதான சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்குக்  காது கேளாத பிரச்னை பிறந்ததிலிருந்து உள்ளது. இக்குறையை நீக்குவதற்குரிய மருத்துவப் பரிசோதனையை சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் செய்து பார்த்துள்ளனர்.

பரிசோதனையில் ஒலி / ஊடுகதிர் சோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் Bilateral Profound Sensorineural hearing Loss (SNHL) எனும் நோய், சிறுமியின் மூளையுடன் தொடர்புடைய நரம்பு மண்டலத்தைத் தாக்கியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான்.

பள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாசீன்அஸ்ஸலாமு அலைக்கும்.

 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்களம் (பாண்டி to விழுப்புரம் வழி) கிராமம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் R. உசேன் கான், குவைத்தில் குறைந்த சம்பளத்தில் ஓர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார்.

 

கல்வியை விதைப்போம்அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

அன்புடையீர்,

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதி தேனி மாவட்டம். தாழ்த்தப்பட்ட சமூகத்தவராக இருந்து 20-30 ஆண்டுகளுக்குமுன் இசுலாத்தை ஏற்ற மக்கள் தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரசியா பேகம் வயது 37, இந்தச் சகோதரிக்குக் கழுத்தில் கேன்ஸர் ஏற்பட்டுள்ளது. இது நான்காவது கட்டத்தை தாண்டி மிகவும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளார். சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள குளோபல் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது சிகிச்சைக்கான செலவு 1,50,000 ரூபாய் ஆகும் என டாக்டர்கள் கூறிவிட்டனர். சான்று கீழே:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஜமால் முகமது. இவரது மகன் அஸ்பர் அகமது(17). இவர் சிறு வயதாக இருக்கும் போதே தந்தை ஜமால் முகமது இறந்து விட்டார். தாய் நர்கிஸ்ராணி கூலி வேலை செய்து படிக்க வைத்தார். இவரும் கடந்த சில மாதங்களாக உடல் சரியில்லாமல் உள்ளார். மாணவர் அஸ்ஃபர் அகமது அருகிலுள்ள இரும்புக்கடையில் கூலி வேலை செய்து தாயையும் கவனித்து, மேல்நிலை படிப்பையும் முடித்தார்.

சாதனைகள் படைக்க வறுமை ஒரு தடையல்ல; திறமை இருந்தால் போதுமானது என்பதைக் கேள்விபட்டுள்ளோம். இங்கே ஒரு மாணவி, சாதனைக்கு மொழியும் கூட ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். ஆம்! மலையாள மொழியில் நான்காம் வகுப்பு வரை படித்த, கேரளாவைச் சேர்ந்த மாணவி புஷ்ரா பானு, அதன் பின்னர் தமிழ் மொழியினைக் கற்று கடந்த +2 தேர்வில் 994 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவரது இந்தச் சாதனையை எட்டுவதற்கு அவர் கடந்து வந்த பாதை கடினமானதாகும்.

உயிருக்குப் போராடி உருகும் பிஞ்சுநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூரைச் சேர்ந்த ஜஹபர் சாதிக்கின் மகன் இபுராஹீம், மூன்று வயது நிரம்பிய பாலகன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக விரைப்புற்று நோயால் பாதிக்கப் பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.

அவனின் தந்தை ஜஹபர் சாதிக் மிகக் குறைந்த ஊதியத்தில் டிரைவராகக் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இதுவரைக்கும் அவரது ஒரே சொத்தாக இருந்த, குடியிருந்த வீட்டையும் மகனது மருத்துச் செலவுக்காக விற்று விட்டார்.