முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஏடு-இட்டோர்-இயல்

ரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு ஒன்றைக் கடத்த உதவுவதே ஊடகம் ஆகும்.

பாராபங்கி! (Barabanki) - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம்.

"ந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை" சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு (Act Now For Harmony and Democracy) அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மகேஷ் பட், 'இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை' எனும் கருப்பொருளில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது மேற்கண்டவாறு வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். மேலும், "இதுபோன்ற பாரபட்சமான மனப்பான்மைக்கெதிரான (anti-discrimination law) சட்டம் இயற்றப்பட வேண்டியது உடனடியான தேவையாகும்" என்றும் கூறினார்.

2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30!

முஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினர். "என்ன விஷயம்?" என்று முஃப்தி கேட்க, "ஸஹாப் உன்னைப் பார்க்க விரும்புகிறார்" என்றனர். குஜராத்தில் 'ஸஹாப்' என்றால் யாரைக் குறிக்கும் என்று அங்கு எல்லாருக்கும் தெரியும்.

பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத படிப்பினையாகவும் அம்மூவரது செயல்பாடுகளில் சில முஸ்லிம்களின் கடமையான வழிபாடுகளாகவும் மாறிப் போயின.

அமெரிக்கத் திரைப்படத் துறையினால் அறியப்படாதவனும் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ.யின் ஏஜெண்டாகப் பணியாற்றிக்கொண்டு கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வருபவனுமான சாம் பேஸிலி (Sam Bacile) (எ) நகூலா பேஸிலி நகூலா (Nakoula Basseley Nakoula) என்பவனும், அல்குர்ஆனை இழிவு படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதன் பிரதிகளை எரித்துச் சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த அடிமுட்டாள் டெர்ரி ஜோன்ஸ் என்பவனும் இணைந்து Innocence of Muslims என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்கான ட்ரெய்லர் ஒன்றினைக் கடந்த ஜூலை 2ந்தேதி யூட்யூப் தளத்தில் வெளியிட்டனர். இதனைக் கண்ணுற்றவர்கள் துவக்கத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கௌஹாத்திக்கு வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் ரயில், பெங்களூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 5.40 மணிக்கு செண்ட்ரலுக்கு வந்து சேரும்.

கடந்த 1.5.2014 வியாழக்கிழமை சென்னை செண்ட்ரல் நிலையத்துக்கு கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தபோது காலை மணி 7.10.

நாட்டு மக்களின் மறதி என்பது ஓட்டுப் பொறுக்கும் நாலாந்தர அரசியல்வாதிகளின் மூலதனம் மட்டுமல்ல; நடுநிலை வேடம் கட்டியாடும் ஊடகங்களுக்கும்தான்.

சான்றாக, தினமணியில் வெளியான தலையங்கத்தின் சில பகுதிகளைப் படித்துக்கொள்வோம்:

கடந்த 26.11.2008இல் தொடங்கி, மும்பையில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 அப்பாவிப் பொதுமக்களும் சில காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்ட தீய சக்திகளால் மும்பை தீவிரவாதத் தடுப்புக் காவல்துறைத் திலகம் கார்கரேயும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

லகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.”

- M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978, pp. 33).