முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

சத்தியமார்க்கம்.காம் பற்றி

ல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம், தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாக இருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ''...என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை பிறருக்குச் சேர்ப்பித்து விடுங்கள்...'' (ஸஹீஹூல் புகாரி)

இதன் அடிப்படையில் சத்தியமார்க்கம்.காம் இணையதளத்தை தங்கள் சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் தமிழ் அறிந்த அனைவருக்கும் சென்றிடும் வண்ணம் எடுத்துக் கூறுங்கள்.

மேலும் தங்களுக்குச் சொந்தமான இணையதளமோ, வலைப்பதிவோ இருப்பின் கீழே காணும் Script ஐ தங்கள் (template) வார்ப்புருவில் ஒட்டிக்கொள்வதன் மூலம் சத்தியமார்க்கம்.காமின் அழைப்புப்பணிக்கு உதவிடுங்கள்.

<a href="http://www.satyamargam.com"><img border="0" 
src="http://www.satyamargam.com/images/www.satyamargam.com.jpg" alt="சத்தியமார்க்கம்.காம்" /></a>

இந்த நிரலை உங்கள் தளத்தில்/வலைப்பூ வார்ப்புருவில் ஒட்டி சேமித்தவுடன் கீழ்க்கண்டவாறு தெரியும்.

சத்தியமார்க்கம்.காம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

உங்களின் மின்னஞ்சல் முகவரிகளை விரும்பத் தகாத அழையா விளம்பரதாரர்களிடம் இருந்து பாதுகாக்க எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். உங்கள் மின்மடல் முகவரிகளை நாங்கள் எந்த ஒரு மூன்றாம் நபரிடமோ அல்லது  நிறுவனத்திடமோ  கொடுப்பதில்லை. அதேவேளை ஏதேனும் அதிநுட்பக் காரணிகளால் மின்னஞ்சல் முகவரிகள் நாங்களறியா வண்ணம் திரட்டப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது என்பதையும் அறியத் தருகிறோம்.

சத்தியமார்க்கம்.காம் இணையதளம் ஒரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானதன்று. இது முழுக்க முழுக்க அர்ப்பணிப்பு மனப்பான்மையுள்ள சில தன்னார்வச் சகோதரர்களால் குழுவாக செயல்பட்டு வரும் ஒரு தூய இறைப்பணியாகும். எவ்வித உலக ஆதாயங்களுக்காகவும் இல்லாமல் முழுக்க இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்ற இறைவேட்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு வடிவமாகும்.

எந்த ஒரு இயக்கத்தினரையோ, பிரிவினரையோ, மட்டும் சார்ந்திராமல் தூய இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிகளை தமிழ் அறிந்த உலக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் அரும்பணியை சத்தியமார்க்கம்.காம் செய்து வருகிறது.

சத்தியமார்க்கம்.காம் இணையதளத்தில் இடம்பெறும் ஆக்கங்கள் ஆசிரியர் குழுவின் முழுப்பரிசீலனை தேவைப்படின் மட்டுறுத்தலுக்கு உட்பட்டே பிரசுரிக்கப்படுகிறது. குறிப்பாக இஸ்லாமிய ஆய்வுக்கட்டுரைகள், எமது மார்க்க அறிஞர்களின் பார்வையில் குர்ஆன் மற்றும் நபிவழியுடன் சரிபார்க்கப்பட்டும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபின்பும் பிரசுரிக்கப்படும்.

இத்தளத்தில் எழுதப்பட்ட ஆக்கங்களுக்கு முழு பொறுப்பாளர், அந்த ஆக்கத்தினை எழுதியவரே ஆவார். எனினும், இத்தளத்தில் தாங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமான கருத்துக்களோ, அல்லது பிழையான இறைவசன எண்களையோ அல்லது ஹதீஸ்களையோ காண நேரிட்டால் எங்களுக்குத் தகுந்த ஆதாரத்துடன் தெரிவியுங்கள். இத்தளத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் குர்ஆன் மற்றும் சஹீஹ் ஹதீஸுக்கு எந்த வகையில் முரண்பட்டிருப்பதாகச் சுட்டப்பட்டால் அவை பாரபட்சமின்றி உடனடியாகத் தவறுகள் திருத்தப்படும்(சரி செய்யப்படும்) என்பதை அறியத் தருகிறோம்.

இத்தளத்தில் உள்ள பொதுவான மற்றும் தமிழ் இஸ்லாமிய இணையதளங்களுக்கான சுட்டிகள் சேவை மனப்பான்மையில், நன்னம்பிக்கை (courtesy) அடிப்படையில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உங்களுக்கு ஆட்சேபணை இருந்தாலோ, அல்லது சுட்டப்படும் தளங்களில் விரும்பத்தகாத விஷயங்கள் இடம் பெற்றிருந்தாலோ, சத்தியமார்க்கம்.காம் பொறுப்பேற்காது.

இடம்பெறும் ஆக்கங்களில் சேர்க்கைகள், நீக்கங்கள் உள்பட திருத்தும் உரிமை இணையதளக் குழுவினருக்கு உண்டு.

சத்தியமார்க்கம்.காம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும் ஆக்கங்களையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை அனுப்ப விரும்பும் சகோதரர்கள் தள நிர்வாகியுடன தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்களுக்குச் சொந்தமான இணையத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் தாங்கள் விரும்பும் பட்சத்தில் சத்தியமார்க்கத்தின் செய்தியோடையைத் (feed)தொடுப்பாகச் சேர்த்துக்கொள்ள இயலும்.

சகோதர இஸ்லாமிய தளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் எங்கள் அறிவுக்கு எட்டியவரையில் சரி பார்க்கப் பட்டு இங்கே இடப்படுகின்றன. இத்தகவல்களைத் திரட்டுவதில் அவர்கள் இட்ட உழைப்புக்கு நாம் நன்றி சொல்கிறோம். ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் வாழ்க்கை நெறியாக வழங்கப்பட்ட இஸ்லாம் மற்றும் அதன் அடிப்படைக் கொள்கைகளுக்கு எவரும் தனிப்பட்ட சொந்தம் கொண்டாட இயலாது. எனவே எங்கள் தளத்தில் இஸ்லாம் தொடர்பான தகவல்களை எவரும் அழைப்புப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறியத் தருகிறோம். (எங்களின் தளப் பெயரையும் நன்னம்பிக்கை அடிப்படையில் குறிப்பிட வேண்டுகிறோம்)

நோக்கம்: (ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாய பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு)

சத்திய மார்க்கம்

இது இறைவனால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளில் மிகவும் சிறந்த அருட்கொடையாகும். இந்த அரிய அருட்கொடைக்கு தமது இறைவனுக்கு என்றென்றும் நன்றி செலுத்த வேண்டிய நம் சமுதாயம், பிறப்பால், இனத்தால், நிறத்தால், மத-குல, மொழி-பணி, கட்சி, கழகம், சங்கம், குழு, இயக்கம் போன்ற இன்னபிற வேறுபாடுகளால் பிரிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

சத்தியமார்க்கம்.காம் இணையதளம் ஓர் இணைய மின் நூலகம் என்று கூறலாம். இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிகளை ஒரு போதனையாக மட்டுமே கொள்ளாமல், பல்சுவை அங்காடியாக, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும் சில இஸ்லாமிய சகோதர இணையதளங்களிலிருந்து சத்தியமார்க்கம் இன்ஷா அல்லாஹ் முற்றிலும் மாறுபட்டு விளங்கும் எண்ணத்துடன் சிலத் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது.

சர்வதேச தரத்தில் இவ்விணையத் தளத்தை உலகத் தமிழ்  மக்களுக்கு வழங்கும் வண்ணம், ஒருங்குறி (Unicode) மற்றும் தானியங்கி எழுத்துரு (Dynamic Font) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எவ்விதமான உலகியல் இலாபங்களுக்காக நடத்தப்படவில்லை. எனவே கட்டுரைகளைச் சமர்ப்பிப்பவர்களுக்குப் பணமுடிப்போ வேறு ஏதும் சன்மானமோ வழங்கப்படுவதில்லை. படைப்பாளிகள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு படைப்புகளைச் சமர்ப்பிக்க ஆர்வமூட்டப்படுகிறார்கள்.

அ. இஸ்லாத்தை முன்னிறுத்திய சிந்தனை, இயக்கங்களையோ இஸங்களையோ பின் நிறுத்துதல் என்பன இத்தளத்தின் அடிப்படைக்கொள்கைகளாக இருக்கும்.

ஆ. ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது சொல்லப்படும் விஷயம் என்ன என்பதே முக்கியம். சொல்வது யார் என்பது அவசியமில்லை.

இ. ஒற்றுமை, சகோதரத்துவம், பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் என்பதில் உறுதியுடன் உள்ளோம். எந்நிலையிலும் சமுதாய முன்னேற்றம்/பாதுகாப்பு மட்டுமே கருத்தில் கொண்டு சமுதாய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைக் குலைக்கும் விதமான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஈ. தூய்மையான இக்லாஸ் உடன் எந்தச் சிக்கலையும் அணுக உள்ளோம்.

உ. தனிநபர் துதியோ/மிதியோ இல்லாத அலசல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இஸ்லாம் கற்றுத்தந்த கண்ணியம் பேணப்படும். "துருவித் துருவி உங்கள் சகோதரனின் குறைகளை ஆராய வேண்டாம், ஒரு முஃமினின் மானம் இன்னொரு முஃமினுக்கு அமானிதம்" என்கிற இறை அறிவுறுத்தல்களுக்கேற்ப (சமுதாய முன்னேற்றத்திற்குப்) பிரச்னை தரும் இஸ்லாமியரின் (தனி மனிதரின்) பிண்ணணியைத் தோண்டாமல், தேவையில்லாத விஷயங்கள் என்று நிர்வாகிகளால் முடிவெடுக்கப்படும் விவாதங்கள் மேற்கொண்டு தொடராமல் நிறுத்தப்படும்.

ஊ. தவறை எவர் செய்திருந்தாலும் நடுநிலையோடு சுட்டிக்காட்டுவோம். சமூகத்திற்கு பலன் தரும் நன்மையை எவர் செய்திருந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்போம். சமுதாய முன்னேற்றத்திற்குச் சவாலாக விளங்கும் காரணிகளை எவ்வித பாரபட்சமுமின்றி எடுத்துரைப்போம்.

எ. அனாவசியமாகத் திசை திருப்பக்கூடியதாகவோ, அல்லது விதண்டாவாதம்/விஷமம் செய்யும் எண்ணத்தில் அமைந்த கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது. அவ்வாறு தோன்றும் கருத்துக்களையும், பின்னூட்டங்களையும் அகற்றும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு.

ஏ. சமுதாய ஒற்றுமை/முன்னேற்றம்/நிலைநிற்பு போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமுதாயத்திற்கு எதிராகப் பின்னப்படும் சதிவலைகளை ஆதாரத்துடன் தரும் ஆக்கங்கள் எவ்வித பயமும் இன்றி பிரசுரிக்கப்படும். சமுதாய முன்னேற்றம் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இத்தளம் செயல்படும். அதற்கு எதிரான ஒவ்வொரு செயல்பாடுகளும் தோலுரித்துக் காட்டப்படும்.

"பருவத்தே பயிர் செய்" என்பது ஆன்றோர் வாக்கு. காலம் கடந்த ஞானோதயத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை என்பதை இன்று முஸ்லிம் சமுதாயம் கண்கூடாகக் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் உலகத்தின் வளர்ச்சிக்கு ஒப்பத் தன்னை தயார் படுத்திக் கொள்ளாத முஸ்லிம் சமுதாயம், இன்று தனது கைகளை விட்டுப் போன அல்லது எதிர்கால சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டிய ஊடகத் துறையின் சிறப்பைத் தெரியாமல் இருந்ததன் பலனை இன்று உலகளாவிய அளவில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களில் உலகில் ஊடகத்தால் ஏற்பட்ட விளைவுகள் எண்ணிலடங்கா! உலகின் கடந்த கால நிகழ்வுகளில் ஊடகம் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளது. இன்று உலக மக்களால் முஸ்லிம் சமுதாயம் ஒருவிதப் பயங்கரவாத சமுதாயமாக பார்க்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் ஊடகங்களே எனில் அது மிகையாகாது. இதனை இன்று எழுதித் தெரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. அந்த அளவிற்கு இது வெளிப்படையான ஒரு விஷயமாகும்.