முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவியல்

இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு 'கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு' என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு! நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது?, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது?, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன? ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் அபாயகரமானது என பீதி கிளப்பிய 'Higgs Boson'! ஆய்வு தொடங்கியது.

தற்போதைய அதிவிரைவுக் கணினி ரோட்ரன்னரின் ஒரு பகுதி!நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது.
 
கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்' (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

{mosimage}நாம் வாழும் புவி அங்கம் வகிக்கும் சூரியக் குடும்பம் (Solar system) பங்குபெறும் பால்வழித்திரள் (The Milky Way)  எனும் பேரண்டத்திலிருந்து (Galaxy) சுமார் 20.5 ஒளியாண்டுகள் (light-years) தொலைவில் புவியை ஒத்த இயல்புகள் கொண்ட இன்னொரு வெளிக்கோள் (Exoplanet) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவராத கோள்கள் வெளிக்கோள்கள் என அழைக்கப்படும். இந்தக் கண்டுபிடிப்பைத் தென் ஐரோப்பிய  விண் ஆய்வகம் (European Southern Observatory) அறிவித்துள்ளது.

ஐரோப்பிய விண்ணாய்வு மையம் (European Space Agency - ESA) உருவாக்கியுள்ள மாபெரும் சுமைதூக்கி விண்கலம் (Freighter Spacecraft) நாளை (9/3/2008) ஞாயிறன்று மக்கா நேரப்படி காலை 07:03 மணியளவில் பிரெஞ்சு கயானாவிலிருந்து ஏவப்பட ஆயத்தமாக உள்ளது. இந்த விண்கலம் விண்ணில் உலாவந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்ணாய்வு நிலையத்திற்குத் (International Space Station - ISS)தேவையான பொருள்களை எடுத்துச் செல்லவும், அங்கிருந்து கழிவுகளை எடுத்துக் கொண்டு திரும்பவும் தற்போது ஏவப்படுகிறது.

செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.
  
கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.