முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் மடல்

அன்புமிக்க சத்தியமார்க்கம் தள நிர்வாகத்தினர் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரக்காத்துஹு!

 

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என அறிவித்து அதற்கிணங்க அரசியல் சாசனங்களும் எழுதி சட்டங்கள் வகுத்துக்கொண்டு, எழுத்துக்கும் நடைமுறைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று எண்ணுமளவுக்கு நம்முடைய பாரத நாட்டின் அரசியல்வாதிகளும், அரசியல்வாதிகளுக்குத் துணைபோகும் சில அதிகாரிகளும் சட்ட ஒழுங்குகளைப் புறக்கணித்து வருகின்றனர்.

''பயங்கரவாதம்'' என்று கருதப்படும் குற்றங்களைப் புரிந்தவர்கள் எவராயினும் பாராபட்சமின்றி அவர்கள் மீது சமமாக குற்றவியல் சட்டங்கள் பாய வேண்டும். ஆனால் பயங்கரவாதத்தைச் செயல்படுத்த வன்முறைக் களமிறங்கியவர்களிடமும் வன்முறை செய்தவர் எந்த இனத்தைச் சார்ந்தவர் என்றறிந்து ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் ஓரவஞ்சனை செயலுக்கு ஒப்பாக சட்டங்கள் வளைக்கப்படுகின்றன.

இதற்கு உயர்மட்ட ஆளும் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களும் விதிவிலக்கல்ல என்று தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளார் ஒரு வாசகர்.

புதிதாக தொடங்கியுள்ள ''வாசகர் பகுதி" யில் தொடர்ந்து பல்வேறு சிந்தனைகளை, வாசகர்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம் - சத்தியமார்க்கம்.காம்