முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் மடல்

ங்கிலத்தில் "Double Standard" என்றொரு பதம் உண்டு. தமிழில் இரு நிலைபாடு. தீவிரவாதிக்கு மதமில்லைTerrorism, terrorist, - தீவிரவாதம், தீவிரவாதி - எனும் சொற்களுக்கும் இந்த ”Double Standard” -க்கும் அதென்னவோ அப்படியொரு தோழமை - அம்மா, சின்னம்மா போல. இந்தத் ”தீ”ச்சொற்களுக்கான மொழியாக்கமே உலகம் முழுக்க தனியொரு விதிக்கு உட்பட்டு, அது தான் நியதி என்று நிலைத்தும் விட்டது.

(இது, நடைவண்டி வலைப்பூவில் வெளியான ஒரு மீள்பதிவு)

ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.

இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை. இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன்.

இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது ... இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள் ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி.

அட ங்கோ... குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே... அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது. தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.

தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா... ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி.

தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’,என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி... ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக தெரியக்கூடிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது. ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல...’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.

மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கே தாங்கலை... இதுல யுகங்கள் தோறுமா?

நன்றி : நடைவண்டி

வாசகர்: நஸீர்.

தேசியச் சின்னம்ஒரு நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே என நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த ஒவ்வொரு துறையும் நமது நாட்டில் தத்தமது கடமைகளைச் சரிவர செய்திருக்குமேயானால் அமெரிக்காவின்  எடுபிடியைப் போல் நமது நாடு மாறி இருக்காது. உலகின் தலைசிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கியிருக்கும். ஆனால், நமது நாட்டின் ஜனநாயகத் தூண்களான நான்கு துறைகளும் தமது கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்கின்றன என்றும் சொல்லலாம்; அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் சொல்லலாம்.

அரசு ஆதரவு பெற்ற சிறுபான்மைக் கல்வி நிறுவனமான ‘நிர்மலா கான்வென்ட் ஹயர் செகண்டரி ஸ்கூல்’ மத்தியப் பிரதேசத்தில் இயங்கிவருகின்றது.  இக்கல்வி நிலையம் தனக்கென்றே சில தனிக் கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்பட்டுவருகின்றது.  அவற்றுள் ஒன்று, ‘மாணவர்கள் கிளீன்ஷேவ்’ பண்ணிக்கொண்டு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்பதாகும்.

விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால், செல்போனும் நமக்கு நன்மையே!

அபூ அப்தில்லாஹ்

2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக் கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தவறாது கலந்து தங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை முறையாகப் பதிவு செய்வதே கடமையாகும். இந்த மண்ணின் மைந்தர்கள்- வந்தேறிகள் அல்ல என்பதை நிலை நாட்டுவதாகும்.

சத்தியமார்க்கம்.காம் யாருக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்யாது. இது நமது வாசகர் ஒருவரது மடல்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே,

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களுக்குப் பிறகு நம் சமுதாயம் இந்நிலைக்கு சென்றுள்ளதைக் கண்கூடாகக் கண்டபின்பும் திராவிட கட்சிகளுக்கே வாக்களித்து நாம் வாக்களித்து வீணடைய வேண்டும்?.

அன்பான வாசகர்களுக்கு,

நமது வாசகர்களுள் ஒருவரான சகோதரர் ஹஸன் அவர்களின், "உம்ராச் செய்வது கட்டாய கடமையா?" என்ற கேள்விக்கு நமது தளத்தில் "உம்ரா என்பது சிறந்த நபிவழி (சுன்னத்) வணக்கமாகும்; கட்டாயக் கடமையல்ல" என்று சான்றுகளோடு பதில் அளித்திருந்தோம்.

அதற்கு மறுப்புத் தெரிவித்து வாசகர் முஹம்மது அப்பாஸ், "உம்ராச் செய்வது கட்டாயக் கடமை" என்று வலியுறுத்தி நீண்ட ஒரு பின்னூட்டத்தை அந்தப் பதிவுக்கு எழுதியிருந்தார். கட்டாயக் கடமை அல்லாத ஒன்றை, "கட்டாயக் கடமை" என்று பதிப்பது ஒரு புதிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் அந்தப் பின்னூட்டத்தைத் தள மட்டுறுத்துனர் அனுமதிக்கவில்லை. அவருடைய பின்னூட்டத்தை அனுமதிக்காத காரணத்துக்காக வாசகர் முஹம்மது அப்பாஸ் நமது தளத்தை, "பொய் வெப்சைட்" என்று குறிப்பிட்டு ஒரு மின்மடல் அனுப்பியிருந்தார்.

நமது தளப் பொறுப்பாளர்களின் பலவிதக் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் வாசகர் முஹம்மது அப்பாஸ் அவர்களின் பின்னூட்டம், 'குறுக்கு விசாரணை' என்ற பெயரில் இங்கு (சாய்வெழுத்துகளில், எழுத்துப்பிழைகள் உட்பட அப்படியே) வெளியிடப் படுகிறது. அவருடைய தவறான புரிதல்களைச் சுட்டிக் காட்டி, சான்றுகளோடு நமது நிலை இங்குத் தெளிவாக்கப் படுகிறது:

பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.

விமர்சனம்: ''உங்களில் ஓருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிட சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.''
புகாரி 6154, முஸ்லிம் 4191.


இப்படியிருக்கயில் ஏன் கவிதை என்ற பகுதி? அதனை எடுத்துவிடலாமே. கட்டுரையிலேயே நம் கருத்துக்களைச் சொல்லலாம்.

- மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் முஹம்மது சுல்தான்.

விளக்கம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர் முஹம்மது சுல்தான்,

''உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்கள்: அபூஹுரைரா,(ரலி) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) (நூல்கள்: புகாரி 6154. 6155 முஸ்லிம் 4546, 4547, 4548)

கவிதை கூடாது என்று நீங்கள் எடுத்துக்காட்டிய அறிவிப்புகள் இருப்பதுபோல் கவிதையை ஆதாரித்தும் ஆதாரப்பூர்வமான பல அறிவிப்புகள் உள்ளன.

கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் இஸ்லாம் எதிரானதல்ல. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கவிஞர் என்று அழைக்கப்படும் ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்காக பள்ளிவாசலில் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அதில் நின்று இஸ்லாத்தின் மேன்மைகளையும் நபியவர்களின் பண்புகளையும் அவர் பாடுவார்" என நபிமொழிகளின் விரிவுரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன! கவிஞருக்கு மேடை அமைத்துக்கொடுத்துக் கவிபாடச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாம் கவிபாடுவதைத் தடை செய்யவில்லை!

இஸ்லாத்தில் கவிதை கூடுமா? கூடாதா? என்பதில் கவிதை கூடும் என்பதற்கான இஸ்லாத்தின் சான்றுகளை முதலில் பார்ப்போம்:

கவிதை கூடும்; கூடாது என்ற இருவாதங்களுக்கும் வைக்கப்போகும் அறிவிப்புகளில் கவிதை என்ற சொல்லுக்கு அரபியில் ''ஷிஅர்'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வார்த்தை மாற்றங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பில்லை.

''நிச்சயமாக கவிதையிலும் ஹிக்மத் - ஞானம் உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6145)

(பனூ குறைழா போரின்போது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் ''எதிரிகளுக்கு எதிராக வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். அறிவிப்பாளர்கள்: பராவு பின் ஆஸிப் (ரலி) அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3213, 4123, 4124, 6153. முஸ்லிம் 4897, 4899)

மேலும், மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, தங்கள் உடல் நலக்குறைவைக் கவிதை நடையில் கூறியதாக புகாரியின் 1889, 3926, 5654, 5677 ஆகிய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும், விரிவஞ்சிக் கவிதையை ஆதரிக்கும் பல அறிவிப்புகள் இங்குச் சேர்க்கப்படவில்லை.

கவிதை பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்றும் கவிதையையும் கவிஞரையும் உற்சாகமூட்டும் மார்க்கமே இஸ்லாம் என்பதையும் பல நபிமொழிகள் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றது. "இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் பதிலடி கொடுத்து கவிபாடும்போது வானவர்கோன் ஜிப்ரீலைக் கொண்டு கவிஞருக்கு இறைவன் வலுவூட்டுகின்றான்" என்ற அறிவிப்பு இங்குக் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் ஆதரிக்கும் கவிதைகள்.

எவ்வகையான கவிதைகளை இஸ்லாம் ஆதரிக்கிறது? என்றால் இஸ்லாம் விதிக்கும் ஒரே நிபந்தனை, கவிதையில் உண்மை இருக்க வேண்டும். கவிதை என்ற பெயரில் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பொய்யையும் புனைச் சுருட்டையும் சேர்த்து இட்டுக்கட்டக்கூடாது.

''கவிஞர்களின் சொற்களிலேயே மிகவும் உண்மையான சொல், (கவிஞர்) லபீத் சொன்ன, 'அறிக! அல்லாஹ்வைத் தவிர அனைத்துப் பொருட்களுமே அழியக்கூடிவையே' எனும் பாடல்தான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 3841, 6147, 6489. முஸ்லிம் 4541, 4542, 4543, 4544, 4545,)

கவிதையின் இலக்கணம் அதன் ஒவ்வொரு வாசகத்திலும் உண்மை பொதிந்திருக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகின்றது.

எடுத்துக் காட்டாக: கவிமணி தேசிக விநாயகம் பாடிய ஒரு கவிதை. உண்மையும் உள்ளத்து எழுச்சியும் உணர்ச்சி மயமாகிப் பிறப்பதே கவிதை என்பது அவரது சார்பு.

''உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை,

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்து உரைப்பது கவிதை''

வாழும் காலத்தில் மனிதர்களிடையே சமநிலை இல்லாமல் ஏற்றத் தாழ்வுகளே நிலைத்து நிற்கின்றன. ஆனால் மரணத்திற்குப்பின் ''பிரேதம்'' என்ற ஒரு சொல்லில் மண்ணறையில் சமநிலை சமரசம் ஏற்படுகின்றது! இதைச் சில கவித்துளி வரிகளில் மிகச் சுருக்கமாக ஒரு கவிஞன் பாடுகிறான்:

''ஆண்டி இங்கே அரசனும் இங்கே

அறிஞன் இங்கே அசடனும் இங்கே''

ஆண்டிக்கும் அரசனுக்கும் சமரசம் சமத்துவம் ஏற்படும் இடம் மண்ணறை!

அரசன் மரணித்தாலும், அறிஞன் மரணித்தாலும் அரசனை எடுத்தாச்சா? என்று கேட்பதில்லை! பிரேதத்தை எடுத்தாச்சா? என்றும், முஸ்லிம்கள் சொல் வழக்கில் ஜனாஸாவை எடுத்தாச்சா? மையித்தை எடுத்தாச்சா? என்றே விசாரிக்கப்படும்.

உண்மை, உயிரோட்டம், உணர்ச்சிகள் அடங்கிய கவிதைகளை இஸ்லாம் வரவேற்கின்றது.

ஆமிர்(ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி மக்களுக்காகப் (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள்.

'இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,

தர்மம் செய்திருக்கவுமாட்டோம்,

தொழுதிருக்கவுமாட்டோம்,

உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம்,

உன் வழியைப் பின்பற்றும்வரை எங்களை மன்னிப்பாயாக!

நாங்கள் (போர்க்களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!

எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக!

(அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம்.

எங்களிடம் மக்கள் (அபயக்) குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)' என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடலாயின.)

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'யார் இந்த ஒட்டகவோட்டி?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆமிர் இப்னு அக்வஃ' என்று பதிலளித்தனர். அப்போது, 'அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்கள்: புகாரி, 6148 முஸ்லிம் 3695).

இறைவன் இல்லை என்றால் நேர்வழி என்பதே இல்லை என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது மேற்கண்ட கவிதை.

இஸ்லாம் தடை விதிக்கும் கவிதைகள்.

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத் தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். ( அல்குர்ஆன், 26:224-226)

அல்குர்ஆனின் ''கவிஞர்கள்'' என்ற 26வது அத்தியாயத்தில் ''கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்'' என்ற இறைவாக்கு சத்தியத்திற்கெதிராகவும் அசத்தியத்திற்கு ஆதரவாகவும் போலித்தனத்தைப் பொய்யாகப் புனைந்து கவிதை வடித்த நிராகரிப்பளார்களைக் குறிப்பிட்டுப் பேசுகின்றது.

ஒரு கவிதை அனுமதிக்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் அது சொல்லக்கூடிய தகவலைப் பொறுத்தே அமையும். இறை உணர்வு, இறைவாழ்த்து, ஓரிறைக்கொள்கை, நல்லறம் போன்ற நல்ல கருத்துகளைக் கொண்டதாக இருந்தால் அது அறியாமைக்கால கவியாக இருந்தாலும் வரவேற்கப்படும்.

ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ''உமய்யா பின் அபிஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். ''ஆம் தெரியும்!'' என்றேன். ''பாடு'' என்றார்கள். நான் பாடலைப் பாடினேன். ''இன்னும் பாடு'' என்றார்கள். இன்னொரு பாடலைப் பாடினேன். ''இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன். அறிவிப்பவர்: ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) (நூல்: முஸ்லிம் 4540)

உமய்யா பின் அபிஸல்த் அறியாமைக் காலக் கவிஞர் ஆவார். - ''அவர் தமது கவிதையின் கருத்துகளால் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்து விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அந்த அளவுக்கு - அவரது கவிவரிகளில் ஓரிறைக் கோட்பாடு, சத்தியம், அறநெறிகள், நல்லறங்கள் நிறைந்திருந்திருந்தன. கலப்பற்ற உண்மையான உயிரோட்டமான கவிதைகளுக்கு இஸ்லாம் மறுப்புச் சொல்லவில்லை.

ஆனால், ''கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு'' என உண்மைக்குப் புறம்பாக, கற்பனை கவிவரிகளுக்கு வார்த்தைகளைத் தேடிப் புனைவதும் கவிதை என்ற பெயரில் பெண்களின் அங்கங்களை வர்ணிப்பதும் குர்ஆன் சுன்னாவுக்கு எதிரானவையாகும். இப்படியான புனைவுக் கவிதைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் கவிஞனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட சீழ் சலத்தால் நிறைந்திருப்பது எவ்வளவோ மேல் என்ற கருத்தைச் சொல்லிக் கண்டிக்கிறது இஸ்லாம். அவ்வாறான கவிதைகளையும், கவிஞர்களையும் விட்டு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

உண்மையான - உயிரோட்டமான நல்ல கவிகளைப் பாடுவதையும் கேட்பதையும் குர்ஆன், சுன்னா தடை செய்யவில்லை. ''கவிதையிலும் ஹிக்மத் - ஞானம் உண்டு'' ஞானமுள்ள கவிதைகளை மக்கள் கேட்கலாம்; அதிலிருந்து படிப்பினையும் பெறலாம் என்று விளங்கினால் கவிதைகள கூடும்; கூடாது என்ற இரு கருத்திலுள்ள முரண்பாடு நீங்கிவிடும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்).

சத்தியமார்க்கம் தளத்தில் கவிதைப் பகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் உண்மைக்குப் புறம்பான கவிவரிகள் இடம் பெற்றிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் நன்றியுடன் திருத்திக்கொள்வோம்.

இறையருளால் எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்(UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way) என்ற பயனுள்ள இஸ்லாமியத் தமிழ் நிகழ்ச்சி நாகர்கோவில் IRG ட்ரஸ்ட் அரங்கத்தில் சென்ற வெள்ளியன்று (13,மார்ச் 09) மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமூக நல அமைதி அறக்கட்டளையும் IRG அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Image

ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி பிடித்து கோஷம்போடப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்!