முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் மடல்

கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு, முஹம்மது நபி(ஸல்) அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் கல்லூரி வினாத்தாள் ஒன்றில் கேள்வி வெளியாகியிருந்தது. இதனால் கோபம் கொண்டச் சிலர் விஷமத்தனமாகக் கேள்விகளைத் தயாரித்த ஆசிரியர் ஜோஸஃப் என்பவரின் கை மணிக்கட்டை, துண்டித்தனர். இதனைத் தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையில் சிலரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்று அறிவித்தனர்.

விடுதலை அணிக்கப்பல்கள் (Freedom Flotilla) என்று பெயிரிடப்பட்டு, மே 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சைப்ரஸ் நாட்டுக் கடற்கரையிலிருந்து கஸ்ஸாவை நோக்கி, ஆறு கப்பல்களின் அணிவகுப்பு ஒன்று புறப்பட்டது.

கலாச்சாரச் சீரழிவு

அல் ஜுமுஆ எனும் ஓர் இஸ்லாமிய ஆங்கில மாத இதழ், பெருமளவிலான அமெரிக்க, ஐரோப்பிய முஸ்லிம் வாசகர் வட்டத்தைக் கொண்டது. தரமானதோர் இதழ். அண்மையில் வாசகர் மத்தியில் ஹிஜாப் பற்றியதான ஓர் ஆய்வை இது மேற்கொண்டிருந்தது. அதனையெல்லாம் தொகுத்தும், அதன் அடிப்படையிலும் கட்டுரையெல்லாம் எழுதி வெளியிட்டிருந்தார்கள்.

தோல்வியே வெற்றிக்கான முதல் படி!வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். இந்த உலகத்தில் தோல்வியைச் சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் முழுவெற்றி பெற வேண்டுமானால் தோல்வியை நாம் சந்தித்தே தீர வேண்டும்.

Cricket [FANatic]அப்போது நான் ஆறோ, ஏழோ படித்துக்கொண்டிருந்தேன்.

பன்னிரண்டாவது படித்துக்கொண்டிருந்த சீனியர்களிடம் வேகமாக ஒரு வியாதி பரவிக்கொண்டிருந்தது. தீப்பெட்டியைவிடச் சற்றுப் பெரிய சைசில், ஒரு நீள் சதுரப் பெட்டியைக் காதில் வைத்துக் கொண்டு, வகுப்பு வராந்தாவில் சதா சுற்றிக் கொண்டிருப்பர்கள்.

பூமியின் கீழ் பாதைதுல்கர்னைன் என்றொரு சக்தி வாய்ந்த மன்னர். கிழக்கும் மேற்குமாகப் பிரயாணம் செய்து வரும்போது இரு மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கிலுள்ள ஒரு நகரத்தை அடைகிறார். நிறைய மக்கள். அவர்களை இரு அக்கிரமக்காரக் கூட்டம் சர்வ அட்டூழியம் புரிந்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அன்வர் அல் அவ்லாக்கிது அக்டோபர் 12, 2000. யமன் நாடு, சர்வேதசத் தீவிரவாத அரசியல் செய்தியில் பங்கெடுக்கும் பெருமை பெற்றது. அமெரிக்கக் கடற்படையின் நாசகாரக் கப்பல் USS Cole யமனின் ஏடன் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிக் கொள்ள இளைப்பாறி நின்றது. பகல் 11 மணி இருக்கும். ஏறக்குறைய 9000 டன் எடை கொண்ட அந்தப் பிரம்மாண்ட கப்பலை ஒரு சிறு படகு ஒன்று வந்து இடித்தது. நியாயமாய்ப் படகு தான் நசுங்கி முழுகியிருக்க வேண்டும்.

3 American Hikersஜுலை 31, 2009. அது ஒரு வெள்ளிக்கிழமை. ஷேன் பாவுர் (Shane Bauer) வயது 27, சாரா ஷோர்ட் (Sarah Shourd) வயது 31, ஜோஷ் ஃபாட்டல் (Josh Fattal) வயது 27 ஆகிய மூன்று அமெரிக்கர்கள் காலாற நடக்கும் போது, ஈரான் எல்லைக்குள் நுழைந்து விட, கர்ம சிரத்தையாய் அவர்களை உடனே கைது செய்த ஈரான், "எல்லை மீறி நுழைந்தார்கள், கைது செய்துவிட்டோம்" என்று செய்தி அளித்து விட்டது.

கறிவேப்பிலைநம் அன்றாட உணவு வகைகளில் சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்தும் விலக்க வேண்டியவற்றை விலக்கியும் உட்கொண்டால் நோயில்லா வாழ்க்கை வாழலாம் என்பதற்கு வாசகச் சகோதரி அனுப்பியுள்ள மூலிகைத் துவையல் ஓர் எடுத்துக் காட்டு.

ஒபாமாஅமெரிக்க  அதிபர் ஒபாமாவிற்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு  வழங்கப் படுகிறது.
இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த ஜோக் இதுவாகத்தான் இருக்கும். இந்த நூற்றாண்டில் அரங்கேற்றப் படும் தலைசிறந்த கேலிக்கூத்து ஒபாமாவுக்கு விருது வழங்கும் விழாவாக அமையும்.

ஒளிமயமான எதிர்காலம்'புதிய வாணிகம்' இதழின் ஆசிரியரும் என் முன்னாள் தமிழ்ப் பேராசிரியருமான ஜனாப். முகம்மது ஹுசைன் அவர்கள் கடந்த 27.10.09 அன்று தன் மகன் அப்துல் ரகீமின் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதற்காக வந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கூறிய ஒரு தகவல் அதிர்ச்சி தரும்படி இருந்தது!. அது என்ன?

ஷப்னம் ஹாஷ்மிபாகிஸ்தான், துபை, குஜராத்திலிருந்து உங்களுக்கு அழைப்புகள் வருகின்றனவா?

... ஒரு நிமிஷம்! குஜராத்தில் எங்கிருந்து? கோத்ரா, ஹிம்மத் நகர், சூரத், அஹ்மதாபாத், வடோதரா, தலோல், தஹோட், சபர்கந்தா, பனஸ்கந்தா ஆகிய இடங்களிலிருந்தா?