முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் மடல்

ஓரிறையின் நற்பெயரால்!


தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாகப் பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வைப் பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்.

டந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 அக்டோபர் மத்தியில், உலக அளவில், அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன இஸ்லாமியப் போராளி இயக்கமான ஹமாஸ் அடைந்திருக்கிறது. உலகளவில் கடாஃபிகளும், இந்திய அளவில் ஹசாரேக்களும், தமிழக அளவில் உள்ளாட்சித் தேர்தல்களும் அரசியலின் அவக்கேடாகிவிட்ட ஊழல்+விசாரணைகளும் நம்மை இச்செய்தியை விட்டும் திசை திருப்பியிருந்தன என்று சொன்னால் மிகையாகாது.

‘ஒரு மனிதனின் வாழ் நாள் சாதனையின் அளவை, அவனது இறுதி ஊர்வலத்தின் நீளத்தைக் கொண்டு அளவிடலாம்’ என்பது ஒரு சீனப் பழமொழி.

அப்படியானால் லிபிய முன்னாள் அதிபர் கேர்ணல் முஅம்மர் கடாஃபி தமது வாழ்நாளில் எதையுமே சாதிக்கவில்லையா? என நீங்கள் கேட்கலாம். அதற்கான விடையைத் தருவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

அன்புச் சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

மனிதன் உலகில் உயிர் வாழத்தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்றாக நீர் திகழ்கிறது. இதுபோன்றே மனிதனின் அடிப்படை மூலக்கூறாகவும் நீர் காணப்படுவதையும் அண்மைக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனையே 1400 ஆண்டுகளுக்குமுன் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகையில்:

அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்தான் ...” (24:45) என்றும்

... நாம் உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் நீரை வாழ்வின் மூலாதாரமாக்கினோம் ...” (21:30) என்றும் கூறுகிறான்.

நேற்று 30.03.2011 நடந்த ICCI கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் விளையாடின (கவனிக்கவும்: மோதின அல்ல - விளையாடின). இருநாடுகளின் பிரதமர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கண்டு 'களித்தனர்'. வழக்கம்போலவே, மற்ற எந்த விளையாட்டுகளுக்கும் இல்லாத பரபரப்பும் அரசியல் முக்கியத்துவமும் நேற்றைய அரையிறுதி ஆட்டத்திற்கும் கொடுக்கப்பட்டது.

வட்டிக் கொடுமையைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையாக சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதரி ஹாஜிரா தாஜுன் எழுதி அனுப்பியதை இங்குப் பதிப்பதில் மகிழ்கிறோம்! எல்லாம் வல்ல அல்லாஹ் வட்டியின் அனைத்து வழிகளிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பானாக!

முன்னுரை

உலகையும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்த படைப்பாளனைக் குறித்து  அறிந்து கொள்ளாமல் படைப்புகளை வணங்கிக் கொண்டிருக்கும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் பணியே அழைப்புப் பணியாகும்.

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.

சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.

சுவிட்ஸர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் நவம்பர் 9ஆம் நாள் செவ்வாயன்று ஐக்கிய நாட்டு மனித உரிமைக் குழுவினர் கூடி ஓர் அறிக்கை வெளியிட்டனர். அது, உலகநாடுகள் பேணிவரும் மனித உரிமையின் இலட்சணம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகும் அறிக்கை. அதில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு... என எண்ணிட்டு இருநூற்றி இருபத்தி எட்டுப் பரிந்துரைகள் எழுதப்பட்டுள்ளன. கண்டனங்கள் என்பதைத்தான் "பரிந்துரைகள்" என்று ஐ.நா.ம.உ.கு நளினமாகச் சொல்கிறது. சரி, 'பரிந்துரைகள்' எந்த நாட்டிற்கு?

ந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்ப்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ”ஹே ராம்” என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளைக் கொன்றொழித்த பயங்கரவாதத்தைச் செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

 

சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள் கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர்.