முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் மடல்

குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு "மதரஸா" என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு உலகக் கல்வி (conventional curriculum) திட்டத்தையும் போதிக்கும் மதரஸாக்களும் நடைமுறையில் உள்ளன.

டந்த மார்ச் 11, 2013 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஓர் முக்கிய நாள். தமது சமூக / அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த நாள். நம் தலைவர்கள் எப்படியாவது இலங்கை உணவுகளில் எது ஹலால் / எது ஹராம் என தரம் பிரித்து அறியும் வாய்ப்பினைப் பெற்றுத் தருவார்கள் என்று பெரும் நம்பிக்கை வைத்த நாள். இந்த சிங்கள அரசாங்கத்தை கடந்த ஜெனிவாவில் நாங்கள் மன்றாடியதனால் எங்கள் அரபு சகோதர நாடுகள் ஆதரித்தமைக்கு ஒரு நன்றிக் கடனாகவாவது எங்களுக்கு இந்த அரசாங்கம் ஹலால் உணவைக் கண்டு கொள்ள வழி செய்வர் என்று நம்பி இருந்த நாள் அது!

விஸ்வரூபம் - கமல்ஹாசன்டந்த சில மாதங்களாகவே "விஸ்வரூபம் என்ற தமிழ்த்  திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது" என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக, தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புகளுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்ற முஸ்லிம் அமைப்புகளின் உறுதியான வேண்டுகோளுக்கிணங்க 21.01.2013 அன்று இத்திரைப்படத்தின் Preview அவர்களுக்குக் காட்டப் பட்டது.

றைவனின் திருப்பெயரால் ...

அது கி.பி. ஆறாம் நூற்றாண்டு!

உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக இருந்த ரோம, பாரசீகப் பேரரசுகள்கூட அந்தப் பகுதியைப் பற்றி சிந்தித்தது கிடையாது.

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி 65 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திடமிருந்து இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அன்றைய மக்கள்தொகை சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய முஸ்லிம்கள், நம்நாட்டு சிறைச்சாலைகளில் சந்தேகத்தின் பேரிலும், நிரூபணமில்லாத குற்றவாளிகளாகவும், நீதி மன்ற விசாரணைக் கைதிகளாகவும் அதிகமான சதவீதம் பேர் இருந்து வருகிறார்கள். ஆட்சிகள் மாறினாலும் முஸ்லிம்களின் அவலக் காட்சிகள் மாறுவதாக இல்லை.

ண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருவது நாம் யாவரும் அறிந்ததே. இந்த கலந்தாய்வு தொழில், விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள், பொது என பல பிரிவுகளில் பல கட்டங்களாக நடத்தப் படுகின்றது.

பெரியாரின் தொண்டர் மணி என்ற சுப்ரமணி அவர்களுக்குச் சொந்தமான காலனியில் நான் குடியிருந்த காலகட்டத்தில் பெரியாரின் நூல்கள் பலவும் படிக்கக் கிடைத்தன. அதே காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்துடன் எனக்குத் தோழமை ஏற்பட்டிருந்தது. நமச்சிவாயத்தை நட்பு வட்டாரத்தில் 'நமசு' என விளிப்போம். ஒரே மாவட்டம், ஒரே தொழில், சம வயது என்பதால் எனக்கும் நமசுவுக்கும் நட்பில் இறுக்கம் ஏற்பட்டுப் போனது. படிப்பதில் எனக்கிருக்கிருந்த ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு சிறு,சிறு நூல்களை எனக்கு நமசு தருவான். எல்லாம் ரஷ்ய மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறு நூல்கள்.

திவுக்குள் செல்வதற்கு முன்பாக, பிறமத நண்பர்களுக்கும் குறிப்பாக வினவு தோழர்களுக்குமான குறிச்சொற்கள்:

  • இஸ்லாம்=அமைதி/சாந்தி(ஸலாம்) - ஓரிறையின் வழிகாட்டலுக்கேற்ப தன்னை முழுமையாக ஒப்படைப்பதன்மூலம் அமைதிபெறலாம் என்ற கொள்கையைப் பறைசாற்றும் வாழ்வியல் நெறிமுறை.

  • முஸ்லிம்=ஓரிறையின் வழிகாட்டல்களுக்குக் கட்டுப்பட்டு, இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அறிவுரையின்படி தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்.

பரவலாக அறியப்பட்டுள்ள இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்கள் இங்கு ஏன்?

மூக இணைய தளங்களான யூ டியூபிலும் பேஸ் புக்கிலும் ஒரு வீடியோ சுற்றிக்கொண்டு வருகிறது. தலைப்பு: 'பிணம் தின்னும் சாமியார்கள்'. இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. அந்த வீடியோவை நான் பார்க்கவும் இல்லை. அதிர்ச்சி தருவதாகவும் அருவருப்பின் உச்சக்கட்டம் (Shocking & Disgusting) என்றும் கருத்து எழுதியிருக்கிறார்கள். இருக்கட்டும்.

தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப்போலக் கருதித் தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை நாமெல்லாம் கண்டிருப்போம். சாப்பிடக்கூட வழியில்லாத அந்த முதியவர்கள் குப்பைத் தொட்டிகளில் விழும் எச்சில் இலைகளைத் தின்பதையும் சிலபோது நாம் கண்டிருப்போம்.

ஆண்களின் பங்கு
பெரும்பாலான ஆண்கள் வரதட்சணை விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் நயவஞ்சகத் தனமானது. பெற்றோருக்கு அந்தச் சமயத்தில் மகன் கொடுக்கும் மரியாதை கண்களில் ரத்தம் வரவைக்கும். “அம்மாவுக்கு வயசாச்சு. ‘நல்ல படியா’ என் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு ஆசை. நாம குறுக்கே நிக்க முடியுமா?”. என்னமோ பெண் வீட்டில் பிச்சையெடுத்துத் தன் குடும்பத்திற்குப் பகிர்ந்தளித்துவிட்டால் தாய்க்குச் சொர்க்கவாசல் நேரடியாகத் திறந்து விடுவது போலிருக்கும் பேச்சு.

ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும்போதும் வீட்டில் வந்து கிடக்கும் திருமண அட்டைகளைப் பார்த்து யார் யாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது வழக்கம். அல்லது, பல நேரங்களில் யாரையாவது ஜோடியாக வெளியே காண நேரும்போது, அசடு வழிய வேண்டி வரும்.

ஒரு கத்தை திருமண அழைப்பு அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அறியமுடிந்த இன்னொரு விஷயம் திருமணம் ஆன கையோடு அதில் இரண்டு ஜோடிகளுக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது என்பது. அதுவும் திருமணம் முடிந்து ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குள்.