முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் மடல்

லுவலக வேலையாக நான் வெளிநாட்டில் ஒரு வருடம் இருந்தேன். திரும்பி வருகையில் விமான நிலைய வாசலில் என் தாய் என்னை ஓடி வந்து கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார்கள். வேலைக்காகச் சென்றிருந்தேன் என்றாலும் என்னை விட்டு நீண்ட காலம் பிரிந்திருந்த என் தாயின் மனநிலையை என்னால் உணர முடிந்தது.

ந்திய தேசம் உலகத்தின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும். இந்நாட்டின் சிறப்பே பல்வேறு மதங்களை, கலாச்சாரங்களைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமைதான்.

த்துவா கொடூர நிகழ்வில், ஆழ்ந்து உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

தேசத்தின் தலைப்புச் செய்திகளில் கஷ்மீர் மீண்டும் இடம்பெறுகின்றது. ஆனால் இந்த முறை கல்வீச்சு, தனிநாடு போராட்டம், இறுதி ஊர்வலக் கலவரம் என்று வழக்கமாக வருவதைப் போல் இல்லாமல் வித்தியாசமான செய்தியுடன்.

ரு திரைப்படத்தில் “Loveன்னா என்ன?” ன்னு விவேக் கேட்கும்போது துணை நடிகர் “ரூம் போடுறது” என்று சொல்வதுபோல ஒரு காட்சி இருக்கும்.

றத்தாழ எட்டு கோடியை எட்டுகின்ற தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கி அயல்நாட்டவரைகூட வியப்படையச் செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் ஒரு மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

ன்றைய பெரும்பாலான மக்களிடையே நிலவும் கல்வி மற்றும் பாடத்திட்டத்தைப் பற்றி மக்கள் கருத்தில் முதன்மையாக நிற்பது மத்திய CBSE பாடத்திட்டம்தான்.

பிள்ளைகளைப் பெற்றவர்களே!

ஆணாயினும் பெண்ணாயினும் உங்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

ங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

“நம்ம தோசைய எடுத்துட்டு போய் காய்கறிங்கள சேத்து பிஸ்சான்னு பேர் வச்சு நம்மகிட்டயே மார்கெட்டிங் பண்றானுங்க”, “விடுங்க சார் அவங்கள..இளைய சமுதாயத்துக்கு நீங்க கத்துத் தர வேணாம்..அவங்களே கத்துக்குவாங்க” என்று முகத்தில் வழியும் வியர்வையினை விரல்களால் துடைத்துக் கொண்டே பல்வேறு கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பேசிய வீரியமிக்க பேச்சுகளே இளைய சமுதாயத்தின் இதயங்களில் உங்களுக்கு ஒரு தனி இடத்தைத் தந்தது.

ரபரப்பான அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நம் தமிழகத்தில்...! என்னுடைய நண்பர் வேடிக்கையாகக் கூறினார்:

“மற்ற மாநிலங்களிலும்கூட சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன, நம் மாநிலத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், நம் தமிழக மக்களுக்கு ஓட்டுப் போடுவதற்குப் பணம் கொடுக்கப்படும்.

முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி திட்டமிட்டு உருவாக்கிய ‘ஜிஹாதிகள்’ என்ற பெயரிலான பொய்ப் பிரச்சாரமடங்கிய குறும்படங்கள் பல தற்போது வலம் வருகின்றன. அதைப் பார்த்துவிட்டு, உணர்ச்சி வேகத்தில் யாரும் அதனை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் ஷேர் செய்யாதீர்கள். இதைக் காணும் எவரும் இதில் பல உண்மைக்குப் புறம்பான விஷயங்கள் உள்ளதைப் புரிந்துகொள்வர். எனவே, உணர்ச்சி வசப்பட்டு இந்த குள்ளநரித் தந்திரத்துக்கு பலியாகிவிடாமல் இதன் பின்னணியிலுள்ள சதியினைப் புரிந்துகொள்வது நம்முடைய எதிர்வினை எத்துணை புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.

முன்னெப்போதைக் காட்டிலும் உரத்த குரலில் தற்போது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் குரலாக மதுவுக்கெதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

ஆளும் அதிமுக-வைத் தவிர மற்றெல்லாக் கட்சியினரும் ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுலுக்கு வரவேண்டும்’ எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.