முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

Mohd Ali ips

இது முனைவர் A.P. முஹம்மது அலீ IPS (R) பக்கம்

"பேட்டை முதலாளி" என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும் தோல் வியாபாரத்தில் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், தமது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது முஸ்லிம்களை இந்திய அளவில் தலைநிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி. நாட்டுப்பற்று மிக்கவர்.

கடந்த சில நாட்களாக அரபு நாடுகளில் நடக்கும் மக்கள் எழுச்சியினைப் பார்த்து உலகமே வாயடைத்துப் போயுள்ளது. ஏனென்றால், மக்கள் பட்டினியும் பசியுமாக அல்லல்படும் வேளையில் மன்னர்களும்அதிபர்களும் பகட்டாகப் பலஆண்டுகள் சிம்மாசனத்தில் பசைபோட்டு ஒட்டியவர்களாகத் திகழ்கிறார்களே, அந்தத் தலைவர்களாலே கட்டுப்படுத்த முடியாத "மக்கள் புரட்சி, அமைதியான முஸ்லிம் மக்களிடம் வந்தது எப்படி?" என்பதுதான் உலத்தாரின் வியப்பு.

1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்பு மக்களவைக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்கள் கதவுகளைத் தேர்தல் வந்து தட்டும். சில அசாத்தியமான சமயங்களில் ஐந்தாண்டுகளுக்கு முன்பே தன் தலையினை வெளிக்காட்டும். "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்ற பழமொழிக்கிணங்க, இந்தியக் குடிமக்கள் அதனை அறிந்து கொள்ளும் விதமாகப் பொதுச்சுவர்களிலும் தனியார் சுவர்களிலும் போட்டி போட்டுக் கொண்டு வண்ண வண்ண எழுத்துகளில் தங்கள் கட்சி சின்னங்களை பொறித்து விளம்பரம் செய்கின்றன.

சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி,     நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. அதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து, அதே தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந்தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு படகுகளில் உல்லாசமாக அருகில் உள்ள தீவினைப்பார்க்கச் சென்ற சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் விபத்துக்குள்ளாகி, 11 பேர் பலியானதாக முதற்செய்தி வந்தது.

ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜைப் பற்றிப் பாடப்பட்ட இஸ்லாமியப் பாடகரின் பாட்டைத்தான் தலைப்பாகத் தந்துள்ளேன். ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த தியாகச் செம்மல் நபி இபுராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவத் துணிவினைச் சோதித்த நிகழ்வு அது.