முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் பகுதி

இது வாசகர் பகுதி.

அரசியல் நிகழ்வுகள், சமுதாயப் பிரச்னைகள், சமூக அவலங்கள் மற்றும் இவற்றிற்கான தீர்வுகள் ஆகியவை தொடர்பான வாசகர்களின் பார்வைகளை இங்கே சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

ளைகுடா வாழ்க்கையின் வரங்களிலொன்று, நினைத்த நேரத்தில் மக்காவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைப்பது. சவூதியின் விசா கிடைப்பதைப் பொறுத்து இரண்டொரு நாளில் கிளம்பிவிடலாம். தரைமார்க்கமாக தோஹாவிலிருந்து ஆயிரத்தைந்நூறு கிலோமீட்டர் தூரம்.  தேவையான முஸ்தீபுகளுடன் காரில் சுமார் பன்னிரண்டு மணிநேரப் பயணம். சவூதியின் நீண்ட நெடுஞ்சாலைகள் ஒர் அற்புதம். தொலைநோக்குத் திட்டங்களுக்கான மிகச் சிறந்த உதாரணங்களுள் ஒன்று.

யிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவையும் கொண்டு,  புண்ணியங்கள் பூச்சொரியும் மாதமாக புனித ரமளான்  மாதம் கணக்கிடலங்கா காருண்யமும், கருணையும், சுமந்து வந்தடைந்து விட்டது.

ழக்கமாகத் தன் காரில் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் நண்பர், இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளப் போவதாக நேற்றே தெரிவித்து விட்டார். அதனால் என்னுடன் பணிபுரியும் மற்றொரு நண்பருக்குத் தகவல் அனுப்பி, அழைத்துச் செல்லும்படி கோரியிருந்தேன். அவரோ தானும் பணிக்கு வர இயலவில்லை என அனுப்பி இருந்த மறுமொழியை, தாமதமாக இன்று விடிகாலை 5.35 மணிக்கு தான் பார்க்க நேரிட்டது.

நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதினான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாகக் கற்பதற்கான வாய்ப்புதான் இந்தச் சட்டம்.

பேரா. ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம்!

சென்னை புத்தகத் திருவிழா! மாலை நேரம். கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருந்தேன்.

மீபத்தில் மாணவர் சார்ந்த பிரச்சினைகள் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. அதிலும், அப்பிரச்சினைகளை மாணவர்களே ஏற்படுத்துவதுதான் மிகுந்த வேதனை.

தவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம் கட்டத் துவங்கி விட்டதை கவனித்தீர்களா?

ண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படம், கடந்த 04-12-2014 அன்று அபுதாபியில் அய்மான் மற்றும் காயிதே மில்லத் பேரவையினரால் வெளியிடப்பட்டது. முஸ்லீம் லீக் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள காயிதே மில்லத் ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார்.

மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரமளான் மாதம் துவங்கி விட்டது. நன்மைகளை வாரிப் பெற்றுத் தரும் நல்ல அமல்களைச் செய்து கொள்ள நம்மில் அநேகம் பேர் இறங்கியிருப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்று.

பிரபலங்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கே தெரியாமல் இவ்வாறு புகைப்படம் பிடித்து ஊடகங்களுக்கு விற்பது புகைப்படத் துறையில் பணம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. இத்தகைய புகைப்படம் எடுப்பவர்களையே பேபரஸி (Paparazzi) என்று குறிப்பிடுவர்.

யங்கரவாதத்தைத் தடுப்பதற்காகத் தடா, பொடா என்று என்னென்ன சட்டங்கள் கொண்டு வரப்பட்டனவோ, பெரும்பாலும் அவை அனைத்தும் அரசியல் பழிவாங்கலுக்கே பயன்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை அடக்கி, ஒடுக்கி அச்சுறுத்தி வைப்பதற்காக இந்தக் கருப்புச் சட்டங்கள் இந்திய முஸ்லிம்கள் மீது சற்று கூடுதலாகவே பயன்படுத்தப் பட்டுள்ளன.