முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலகம்

டாலர் தேசத்திலுள்ள நியூயார்க் நகரிலிருந்து வெளியாகும் ‘The Nation’‎ ஒரு வார இதழ். 1865ஆம் ஆண்டு துவங்கி இன்றும் முதுமை தட்டாமல் அச்சாகும் பத்திரிகை. ஜெரிமி ஸ்காஹில் (Jeremy Scahill) அதில் புலனாய்வுச் செய்தியாளர்.

காலித் பின் அல்வலீத் (ரலி)

அரபுலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரும் இஸ்லாமியப் படைத் தலைவர்களுள் மிகச் சிறந்தவருமான நபித் தோழர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களைப் பற்றி மலையாள மொழியில் வெளியான வரலாற்று நூலைத் தமிழில் தழுவி, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்!

சென்ற மாதம் வழக்கம்போல ஒரு இ-மெயில் அழைப்பு. மற்றுமொரு கம்பெனியின் மற்றுமொரு மென்பொருளைப் பற்றிய விளக்கப் பொதுக்கூட்டம் சிற்றுண்டி மற்றும் பேருண்டியுடன் இன்ன தேதியில் இன்ன இடத்தில் நடக்கப் போவதாகவும், என்னுடைய வருகை மிக மிக போற்றத்தக்கதாக அமையும் என்று கண்டிருந்ததாலும், வீட்டில் கிடைக்கும் மிலிட்டரி கட்டுப்பாடு உணவிலிருந்து ஒரு நாளேனும் கிடைக்கும்  விடுதலையை விரும்பியும், இன்னும் சொல்லவியலாத சில காரணங்களாலும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தேன்.

மதீனாவில் ஒருநாள்!

மேகங்கள் திரண்டு வானை மூடிக் கொண்டன. அவற்றின் பின்னே சூரியன் மறைந்து கொள்ள, பகல் தன் வெளிச்சத்தை இழந்தது. அதைக் கண்டு வேகமாய்த் தம் வீட்டிற்குத் திரும்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்களது முகத்தில் பெருங் கவலை. சற்றுக் கழித்து வீட்டிற்கு வெளியே சென்று அண்ணாந்து பார்த்தார்கள். சிறிது நேரம் கழித்து, திரண்ட மேகங்கள் மழை பொழிய ஆரம்பித்தன. அந்த மழையைக் கண்டவுடன்தான் நபியவர்களின் முகத்தில் நிம்மதியும் ஆனந்தமும் வெளிப்பட்டு கவலை மறைந்தது.

இதையெல்லாம் நபியவர்களின் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கவனித்துக் கொண்டேயிருந்தார்கள். பெரும் ஆச்சரியம் அவர்களுக்கு. கேட்டேவிட்டார்கள், "மழை வருமுன் உங்கள் முகத்தில் ஏன் அந்தக் கவலை?"

பாலில் நீர்கலப்பதா?ன்றைய இரவு அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத வேலைகள்; இரவிலோ மக்களின் நலன் காக்க ரோந்து; அதன் பின்னர் பின்னிரவுத் தொழுகை என்று அயராது பணியாற்றிக் கொண்டிருந்தவர் உமர். நம்மைப்போல் தொடர்ந்து ஏழு எட்டு மணி நேரத் தூக்கம் என்பதெல்லாம் அவர் ஒருநாள்கூடத் தூங்கியதாய் அறிய முடியவில்லை. சதா காலமும் இறைவனின் நினைப்பையும் அச்சத்தையும் நெஞ்சில் தூக்கித் திரிந்துகொண்டிருந்தார் அவர்.

மற்றொரு இரவு. மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’ அது அவரது கவனத்தைக் கவர்ந்தது. அதை நெருங்கினார். அருகே நெருங்க நெருங்க அந்தக் கூடாரத்தின் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகைச் சப்தம் கேட்டது. விரைந்து நெருங்கினார் உமர்.

 வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள்.